Wednesday, May 16, 2012

உன்னையே சுற்றும் மனது



சாட்டை இல்லாமலேயே
பம்பரமாய் சுற்றுகிறேன்
சட்டை செய்யாமல்
போனால் எப்படி ?

உறக்கத்தில் கூட
உன்னை மட்டுமே
சுற்றித்திரிகிறது மனது.

உன் அதரங்களின் சிதறும்
மதுத்துளிகளை
பார்வையால் விழுங்கி
மயங்கிப் போனதில்
புரியாமல் கேட்கிறேன்...

எனக்காக ஜனித்தவளே
உன் உதடுகளால் என்னை சபிக்கிறாயா?
இல்லை...
உள்ளத்தால் எனக்காக ஜெபிக்கிறாயா?

சுட்டும் விழிச்சுடரில்
என்னை சுட்டுப்போட்டுவிட்டு
எட்டி நின்று
வேடிக்கை பார்க்கிறாய்!

உன் கன்னக்குழிக்குள்
விழுந்த என்னை
சவக்குழிக்குள் தள்ளாதே.

உனக்கும் எனக்கும்
போலியாய் ஒரு
பிணக்கு எதற்கு?




மணக்க மணக்க
வாழ்க்கை நடத்தலாம்
பூங்கொடியே....
பச்சையாய் திட்டாதே
பச்சைக்கொடி காட்டு!

No comments:

Post a Comment