அதிகாலை
பரபரப்பு பயணத்திலும்
கண் விழிக்கும் முன்னே
அம்மா
கையில் திணித்துவிட்டுப் போன
மிட்டாய்....
அலுவலகம் முடிந்து
அவசர அவசரமாய் வாங்கினாலும்
பேருந்து நெரிசலிலும் கசங்காமல்
அம்மா கொண்டுவந்து கொடுத்த
ஆயத்தப் புத்தாடை..
நள்ளிரவு தாண்டி வந்தாலும்
மறக்காமல்
அப்பா வாங்கிவந்த
மரக்காச்சி பொம்மை...
துள்ளிக் குதிக்க விடாமல்
பள்ளி வளாகத்துக்குள்
ஆசிரியர்கள்
அள்ளித் தெளித்த
வாழ்த்துரைகள்...
எங்களைக் கொண்டாடாத
இவை எதனோடும்
கொண்டாட முடியவில்லை
குழந்தைகள் தினத்தை.
குழந்தைகள் தினத்துக்கு
விடுமுறை வேண்டாம்
விடுமுறை தினத்தில் வரட்டும்
குழந்தைகள் தினம்!
No comments:
Post a Comment